பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது தொடர் இடம்பெற்று வருகிறது.மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் நேற்று (16) கராச்சியில் இடம்பெற்றது.இப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
மே.தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் பூராண் 64(37), பூருக்ஸ் 49( 31), பிராவோ 34(27), பிரண்டன் கிங் 43(21), ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் வஸீம் ஜார் 2 ( 44), தஹானி 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
208 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அணியின் விக்கெட் காப்பாளர் முஹம்மத் ரிஸ்வான் 87(45), அணித் தலைவர் பாபர் அசாம் 79(53), ஆசிப் அலி 21(7) ஆகியோர் ஓட்டங்களை குவித்தனர்.
மே.தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஷெப்பர்ட், ட்ரேக்ஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
போட்டியின் ஆட்ட நாயகனாக மற்றும் தொடர் நாயகனாக அணியின் விக்கெட் காப்பாளர் முஹம்மத் ரிஸ்வான் தெரிவானார்.இந்த வெற்றியுடன் தொடரை 3-0 என்ற கணக்கில் பாபர் படை தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.