நாட்டில் நேற்றைய தினம் (15) 21 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14, 698 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (16) கொவிட் தொற்று உறுதியான மேலும் 518 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 577,484 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.