றிஸ்கான் முகம்மடின் ஏற்பாட்டில்  கல்முனையில் சீசீரீவி இலவச பயிற்சிநெறி!

Date:

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த, தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு ஐக்கிய இளைஞர் சக்தியினால் நடாத்திய மாபெரும் இலவச 𝗖𝗖𝗧𝗩 𝗖𝗮𝗺𝗲𝗿𝗮 𝗜𝗻𝘀𝘁𝗮𝗹𝗹𝗮𝘁𝗶𝗼𝗻

ஒருநாள் இலவச பயிற்சி நெறி நேற்று (15) புதன்கிழமை கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளரும் அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மடின் முயற்சியினால், ஒருநாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்தப் பயிற்சி நெறியில் ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக ஐக்கிய இளைஞர் சக்தியின் ஆலோசகர் கலாநிதி அர்ஷாத் உதுமான் மற்றும் ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு முக்கியஸ்தர்களான ஆசிக் சுபைர், வினோத், ரோஹன, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸர்பான், றுக்ஷான், பஹாத் உட்பட பல இளைஞர்களும் கலந்து கொண்டனர்.நனச கொம்பியூடர் அகடமியின் விரிவுரையாளர் ரணவக்க வளவாளராகக் கலந்து கொண்டு இந்தப் பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடாத்தினார்.200க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில், கலந்துகொண்டு பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

smart

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...