நாடு முழுவதும் இயங்காமலிருந்த வாகன வருமான அனுமதிக்கான இணைய வசதிகள் மீள செயற்பட ஆரம்பித்துள்ளன.குறித்த வசதியை பெற்றுக் கொள்வதற்கு இணையத்திற்கு பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை அடுத்து இந் நிலை ஏற்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண அலுவலகங்களினால் தெரிவிக்கப்பட்டது.
இணையத்தளம் ஊடாக நாளாந்தம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 30,000 ஆக முன்பு காணப்பட்டது.தற்போது அந்த எண்ணிக்கை 60,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.