தெற்கு ஸ்பெயினின் ஆற்றுக் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நாவரே மாகாணத்தில் பாயும் அர்கா நதியின் கரை உடைந்ததில் வில்லவா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.வீடுகள் கூரைகள் மாத்திரமே வெளியே தெரியும் அளவுக்கு தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
பாரா புயலால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழையால் ஸ்பெயின் நகரங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன.கனமழையுடன் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் , மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.