U19 ஆசிய கிண்ணம் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

Date:

U19 ஆசிய கோப்பை தொடர் கடந்த 23-ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகியது. டுபாயில் இன்று (25) இடம்பெற்ற போட்டியில் குரூப் ஏ பிரிவு போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப் போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதனையடுத்து ,இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஹர்னூர் சிங் களமிறங்கினர். அங்கிரிஷ் ரகுவன்ஷி ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.அடுத்து களமிறங்கிய ஷேக் ரஷீத் 6 ஓட்டங்களிலும், தலைவர் யாஷ் துல் டக் ஆட்டமிழந்தும் பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் நிதானமாக விளைாயாடி 46 ரன்கள் குவித்தார். பின் வரிசையில் இறங்கிய விக்கெட் காப்பாளர் ஆராத்யா யாதவ் சிறப்பாக விளையாடி 50 ஓட்டங்கழளை விளாசினார். இறுதியாக இந்திய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 237 ரன்கள் மட்டுமே பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜீஷான் ஜமீர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

238 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி . ஆரம்ப வீரர் அப்துல் வாஹித் முதல் ஓவரிலேயே ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து முஹம்மது ஷெஹ்சாத் களமிறங்கி பொறுப்புடன் விளையாடி பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளித்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் முஹம்மது ஷெஹ்சாத் கடந்த நிலையில் 81 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்ததால் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றி பெற 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை இந்திய அணி சார்பில் ரவிகுமார் வீசினார். முதல் பந்தில் விக்கெட் அடுத்த இரண்டு மற்றும் மூன்றாவது பந்தில் தலா ஒரு ஓட்டம் பெறப்பட்டது.

இதனையடுத்து 4 மற்றும் 5 வது பந்தில் தலா 2 ஓட்டங்கள் பெறப்பட்டதால் கடைசி பந்தில் பாகிஸ்தான் வெற்றி பெற 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை எதிர்கொண்ட அஹமது கான் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

கடைசி ஓவர்களில் அஹமது கான் 19 பந்துகளில் 29 ரன்கள் அடித்தது பாகிஸ்தான் அணியின் வெற்றியை பதிவு செய்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...