சவுதி அரேபியாவின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சவுதி அரேபியா தூதுவராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் பின்வருமாறு,
சவூதி அரேபியா மற்றும் இலங்கையின் தலைமைகளுக்கும் இரு நாட்டு மக்களுக்குமிடையில் நிலவும் நட்புறவுகளின் அடிப்படையில், சவூதி அரேபிய அரசாங்கம், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக வழங்கிய கடன்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் வகையில் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்தாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் “பேராதெனிய – பதுளை – செங்கலடி” பாதை அபிவிருத்தித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காகவும், வயம்ப பல்கலைக்கழக பிரதேச அபிவிருத்தித் திட்டத்திற்கு அடிக்கல் நடுவதற்காகவும் குறித்த சவூதி அரேபியாவின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் (SFD) பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் பின் அப்துல்ரஹ்மான் அவர்கள் அல் – மர்ஷெட் தலைமையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை நேற்று (26) மேற்கொண்டிருந்தார்.1975 ஆம் ஆண்டு இந் நிதியம் நிறுவப்பட்டது முதல் இலங்கை மக்களின் சுபீட்சத்திற்காக, நீர், எரிசக்தி, சுகாதாரம்,பாதைகள் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் 13 திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக 15 அபிவிருத்திக் கடன்களை சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது.இதன் மொத்தப் பெறுமதி 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.