ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்க நிறுவனம் ஏலம் விடுவதற்கு தென்னாப்பிரிக்கா எதிர்ப்பு!

Date:

தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்க நிறுவனம் ஏலம் விடுவதற்கு அந் நாட்டு அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தென் ஆப்பிரிக்க கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் நதிம்தெத்வா கூறியதாவது:

நெல்சன் மண்டேலா 14 ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்த ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்காவைச் சோ்ந்த கியூா்ன்சேஸ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் வரும் ஜனவரி 28 ஆம் திகதி ஏலத்துக்கு விடுவது கண்டனத்துக்குரியது.தென் ஆப்பிரிக்காவின் வலி மிகுந்த வரலாறு, அதன் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தென் ஆப்பிரிக்காவுக்குச் சொந்தமானவை.
எங்களுடன் கலந்தாலோசிக்காமல் எங்களின் நினைவுச் சின்னமான ராபன் தீவு சிறைச் சாவி ஏலத்துக்கு விடப்படக் கூடாது. எனவே, அந்த ஏலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

மேலும், அந்தச் சிறையின் உண்மையான சாவி எங்களிடம் உள்ளதால், ஏலத்தில் விடப்படுவது போலியாக இருக்குமா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா, அதற்காக 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அதில் 18 ஆண்டுகளை ராபன் தீவிலுள்ள சிறையில் அவா் கழித்தாா். பின்னா் நிறவெறி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நாட்டின் முதல் கருப்பினா் ஜனாதிபதியாக அவா் கடந்த 1994 ஆம் ஆண்டு பொறுப்பேற்றாா். தற்போது ராபன் தீவுச் சிறைச்சாலை அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...