இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல்!

Date:

மின்சார உற்பத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளதாக‌ மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் ஒரு மணி நேரமும், நாளை முதல் சுமார் இரண்டு மணி நேரமும் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என குறித்த சங்கத்தின் செயலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை தொடர்ந்து நீடித்து மழைவீழ்ச்சியும் கிடைக்க பெறாவிட்டால் மார்ச் மாத இறுதியில் மின்சார விநியோகத்திற்கான பாரிய பாதிப்பு ஏற்படும். எனவே மாலை 6.30 முதல் 9 மணி வரையான காலப் பகுதியிலேயே அதிகளவான நேரத்திற்கு மின் துண்டிப்பு இடம்பெறும்.

பிற்பகல் 2.30 முதல் நான்கு கட்டங்களாக மேற்கொள்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக இன்றைய தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது .பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்கினால் மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...