கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு!

Date:

கடந்த ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி இம் மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் http://(www.doenets.lk)அல்லது

http://www.onlineexams.gov.lk/eic அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைப்பேசி செயலி ஊடாக (Mobile AppExams) விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்க முடியும்.

அரச பாடசாலை மாணவர்கள், சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...

பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...