நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

Date:

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், வவுனியா, மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே தேவையின்றி வெளியில் நடமாடுவதைக் குறைப்தோடு, போதியளவில் நீரை உள்ளெடுத்தல் உள்ளிட்ட போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...