திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

Date:

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (06) மாலை குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தில் காணி ஆணையாளர் நாயகம், திறைசேரியின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் Trinco Petroleum Terminal தனியார் நிறுவனம் ஆகியன கைச்சாத்திட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 99 எண்ணெய் தாங்கிகளில் 85 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கும் ஏனைய 14 எண்ணெய் தாங்கிகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...