மீள் மதிப்பீட்டின் ஊடாக C யிலிருந்து A யாக மாறிய பெறுபேறு!

Date:

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன.இப் பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவனின் பெறுபேறு C யிலிருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாட்களில் இச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.உயர்தரப் பரீட்சைக்கு கணித பாடத்தில் தோற்றிய கண்டி தர்மராஜா கல்லூரியின் மாணவன் ருச்சிர நிசங்க அபேவர்தன அந்த பாடத்தில் C சித்தி பெற்றிருந்தார்.அத்துடன் வேதியியல் மற்றும் இயற்பியலில் பாடங்களில் அவர் A தேர்ச்சி பெற்றிருந்தார்.அதனடிப்படையில், குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.0084 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 68 ஆகவும், நாட்டு மதிப்பீடு 966 ஆகவும் இருந்தது.

இந் நிலையில் மீள் மதிப்பீட்டின் ஊடாக அவரது கணிதப் பாட பெறுபேறு C யிலிருந்து A ஆக மாறியதை அடுத்து குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.5538 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 12 ஆகவும், நாட்டு மதிப்பீடு 124 ஆகவும் மாறியுள்ளது.மீள் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 48,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் 3,329 பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...