அஷ்ஷெய்க் ஏ.பீ.எம்.அப்பாஸ் கலாநிதிப் பட்டம் பெற்றார்!

Date:

பேருவளை ஜாமிஆ நளீமியாவின் விரிவுரையாளர்களில் ஒருவரான அஷ்ஷைக் அப்பாஸ்(நளீமி) கலாநிதிப் பட்டம் பெற்றார்.

01.05.1967 ல் குருநாகல் மாவட்டத்தின் ஹேனகெதரவில் பிறந்த இவர், ஹேனகெதர முஸ்லிம் வித்தியாலயம், மடிகே மிதியால முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்தார். பின்னர் 1983 – 1990 வரையான காலப்பகுதியில் ஜாமிஆ நளீமிய்யாவில் கல்வியைத் தொடர்ந்து அங்கு முதல் தரத்தில் சித்தியடைந்தார்.

1990 ஆம் ஆண்டு அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொதுக்கலைத் துறையிலும் 1995 ஆம் ஆண்டு அரபு மொழியில் சிறப்புத் துறையிலும் பட்டம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1997 ஆம் வருடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் Diploma கற்கை நெறியைப் பூர்த்தி செய்த அவர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் 2011 முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.இஸ்லாமிய தஃவா துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் செய்துள்ளார்.

2002-2006 இடைப்பட்ட காலத்தில் குவைத் நாட்டில் இஸ்லாம் பிரசன்டேஷன் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தார்.1993- 2001, 2007-2008 ஆகிய காலப் பகுதிகளில் கம்பொளை ஸாஹிரா கல்லூரியில் அவர் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு அவர் ஜாமிஆ நளீமிய்யாவில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.சிங்கள மொழியில் சரளமாக உரை நிகழ்த்த தேர்ச்சி பெற்றுள்ள அவர் ඉබාධා පිලිබදව ඉස්ලාමීය සංකල්පය, සෙනහස උදෙසා, පිරිසුදුකම සහ ඉස්ලාමය ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மலேசிய நாட்டுக்கு 2016 ஆம் ஆண்டு சென்ற அவர் அங்குள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ் பீடத்தில் The Impacts of Actions and it’s Effects on Islamic Jurisprudence of the Sri Lankan Muslim Minority- An objective study (இஸ்லாமிய சட்டப் பரப்பில் செயல்களும் அவற்றின் விளைவுகளும் – இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களுடன் தொடர்பான ஆய்வு) எனும் தலைப்பில் தனது கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

கண்டி மாவட்டத்தில் வெலம்பொடை எனும் ஊரில் திருமணம் செய்துள்ள அவர் மூன்று பிள்ளைகளின் தகப்பனாவார்.மலேசியாவிலிருந்து திரும்பிய பின்னர் அவர் மீண்டும் ஜாமிஆ நளீமிய்யாவில் விரிவுரையாளராக இணைந்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...