மியன்மாரின் மக்களாட்சி ஆதரவாளர், தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனுமதிப் பெறாமல் வோக்கி டோக்கிகளை வைத்திருந்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.