ஆளுமைகள் நிறைந்த, கலீபத்துல் குலபா அப்துல் ஹமீதின் வாழ்வு முன்மாதிரிமிக்கது-முஸ்லிம் கவுன்ஸில் அனுதாபம்!

Date:

இஸ்லாமிய ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபத்துல் குலபாவும் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவருமான மௌலவி ஜே. அப்துல் ஹமீத் அவர்களது மறைவு குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் அதன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது.

கவுன்ஸில் விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மர்ஹும் சாஹுல் ஹமீத் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபாவாகப் பணிபுரிந்து, அந்த அமைப்புக்கு முன்மாதிரியான தலைமைத்துவம் வழங்கினார்.

சமூகத்தின் ஐக்கியத்தில் தீவிர அக்கறை காட்டிய இவர், சிறந்த பேச்சாளரும் ஆவார். ஆளுமைகள் நிறைந்த இவரது வாழ்வு முன்மாதிரிமிக்கது. எல்லா அமைப்புகளையும் மதித்து தன் பணிகளை இவர் முன்னெடுத்திருந்தார்.

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அவரது மறுமை வாழ்வு சிறப்பாக அமைவதற்குப் பிரார்த்திப்பதோடு, இவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு பொறுமையை அளிக்குமாறும் பிராத்திக்கின்றோம்.

என்.எம் அமீன்

தலைவர்

முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சிறிலங்கா

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...