உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் சந்தை விலையில் வீழ்ச்சி!
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது. வர்த்தக பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இவ் விலை வீழ்ச்சிக்கு காரணமாகும். நிதியமைச்சு கடந்த 31 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் சம்பந்தமாக சுங்கவரியை 30 ரூபாவினால் குறைத்திருந்தது.சந்தையில் இருந்த விலையை குறைப்பதே இதன் நோக்கமாகும்.இதற்கமைவாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நிதியமைச்சரின் அங்கீகாரத்துடன் சம்பந்தப்பட்ட வரி குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.