எதிர்வரும் ஏப்ரல் மாதம் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்!

Date:

கொவிட் தொற்று காரணமாக பல முறை பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22) நடைபெற்றது.இதன்போது கொவிட் தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விசேட முறைமையின் கீழ் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வழமை போன்று நடத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சுமார் 5 மாத கால தாமதத்தின் பின்னர் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 255,062 சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளும் 85,446 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.இது 2,943 பரீட்சை மத்திய நிலையங்களிலும், 108 விசேட மத்திய நிலையங்களிலும் இடம்பெற்றது.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மிக விரைவில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...