மெக்சிகோவில் கொவிட் தொற்று அதிகரிப்பால்,சுமார் 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனால் தொடர்ந்து 4 நாட்களாக விமான நிலையத்திலேயே பயணிகள் தவித்து வருகின்றனர்.
“ஏரோ மெக்சிகோ விமான நிறுவனத்தின் ஊழியர்களில் ஏராளமானோருக்கு தொற்று உறுதியானதால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதன் பெரும்பாலான விமானங்களின் சேவை உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால், விமான டிக்கெட் எடுத்தவர்கள் செய்வதறியாது, மெக்சிகோ சிட்டி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். உரிய நேரத்தில் செல்லாவிட்டால் தனது அமெரிக்க வேலை பறிபோகும், என பெண் ஒருவர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.மேலும், விமான நிலையத்தில் தங்களுக்கு உணவுக்கு கூட சரியான ஏற்பாடு செய்யப்படவில்லை என பலரும் குற்றம்சாட்டியுள்ளார்கள்.