கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த நடைபாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். 500 மீட்டர் தூரத்துக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர நடைபாதையை நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தினந்தோறும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் உள்ள நுழைவாயிலினூடாக உட்பிரவேசிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.