நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் இன்று(10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை கொண்டு வருமாறும், சுகாதார அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.