நாட்டில் காகிதங்களுக்கு தட்டுப்பாடு!

Date:

நாட்டில் காகிதங்களின் தட்டுப்பாடு காரணமாக தற்போது சகல பத்திரிகைத் தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் டொலர் தட்டுப்பாடு மற்றும் உலக அளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்குப் பிரதான காரணங்களாக பத்திரிகைத் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்தித்தாள்களை அச்சிடுவதற்காக பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு டன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் தற்போது 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் செய்தித்தாள்களின்‌ உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதுடன் பத்திரிகை தொழில்துறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...