நாளை முதல் நாட்டில் மின் தடைக்கு அனுமதி!

Date:

நாளை (10) முதல் நாளாந்த மின்தடையை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, இதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மின் தடையை அமுல்படுத்துவதற்கு நேர்ந்துள்ளதாகவும், அதற்கான அனுமதியை பெற்றுத் தருமாறும் இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வேண்டியிருந்ததாக அவர் கூறினார்.இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, தாம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்தி, மின்சார விநியோகம் ஆகிய நடவடிக்கைகளுக்கிடையில் ஏற்படுகின்ற இடைவெளியை நிவர்த்தி செய்துக்கொள்ள முடியாமையினாலேயே, மின்சார சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய காலப் பகுதி மற்றும் நேரத்தை இலங்கை மின்சார சபையே தீர்மானிக்கும் எனவும் ,மின்சார பாவனையாளர்கள், கடந்த ஓரிரு வருடங்களாக தமக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளமையே, மின் தடையை அமுல்படுத்த காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓரிரு வருடங்களில் மாத்திரம் சுமார் 40 பில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை மின் பாவனையாளர்கள், இலங்கை மின்சார சபைக்கு செலுத்த தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனால், இலங்கை மின்சார சபை பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளமையினால், மின்சார உற்பத்திக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கூட பணம் கையிருப்பில் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும்,மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு, மின் பாவனையாளர்களும் ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனால், மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை உரிய முறையில் செலுத்துமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...

பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் இடியுடன் மழை

இன்று (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...