மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று (10) மீண்டும் வழமைபோல் இடம்பெறுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தொடருந்து ஹாலிஎல புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (09) முற்பகல் தடம்புரண்டது.
இதனால் மலையகத்திற்கான புகையிரத சேவைக்கள் பாதிக்கப்பட்டது.இதனையடுத்து குறித்த புகையிரத பாதை நேற்றிரவு சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மீண்டும் புகையிரதங்கள் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.