இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நியமனம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளதுடன் விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து நியமனக் கடிதத்தினை கையளிக்கவுள்ளார்.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி, பாகிஸ்தான் இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.