ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.
இரு அணிகளுக்கிடையில் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன, இவை அனைத்தும் பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.முதல் ஒருநாள் போட்டி வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.