சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் வீழ்ச்சி!

Date:

கடந்த சில காலங்களில் சந்தையில் அதிகரித்திருந்த கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளன.

அதனடிப்படையில்,27 ரூபா வரையில் அதிகரித்திருந்த முட்டை விலை, தற்போது 21 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக, கால்நடை வளங்கள், பண்ணை மேம்பாட்டு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் தொடர்பான பிரச்சினை கால்நடை பராமரிப்பிற்கும் தாக்கம் செலுத்துவதாக கொழும்பில் நேற்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது போன்ற நிலைமைகளில், மின்பிறப்பாக்கியைப் பயன்படுத்தி, குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம், இலங்கையில் முட்டை உற்பத்தியை அதிகரிக்க, தீர்வை வரியின்றி விலங்கு உணவை இறக்குமதி செய்ய நிதி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கமைய, தீர்வை வரியற்ற விலங்குணவுகள் கொண்டுவரப்பட்டு, பண்ணைகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.

எனவே, உற்பத்தியாளர்கள், இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகளை தாமாகவே குறைத்துள்ளனர் என இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

வலுவடையும் தாழமுக்கம்: பல பகுதிகளில் மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது,...

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும்...

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி...