மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
96 வயதான முன்னாள் தலைவர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய சிகிச்சை வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.முன்னாள் பிரதமர் மகாதீர் , சில வாரங்களில் மூன்றாவது முறையாக சிறப்பு இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.
மகாதீர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. தற்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் முன்னாள் பிரதமரை மருத்துவ மனையில் பார்வையிட்டார்.
“அவரது உடல்நிலை இப்போது சீராக உள்ளது மற்றும் அவர் சிகிச்சைக்குப் பின் சிறந்த உடல்நிலையோடு இருக்கிறார் என அவரது மகள் மேலும் கூறியுள்ளார்.
“அவர் பூரண குணமடைய பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி மூலம்;:https://aje.io/y68cnx