பிரிட்டிஷ் மகாராணி மிகவும் வெற்கக் கேடான விதத்தில் பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி டொனி பிளாயருக்கு ‘நைட்ஹு{ட்’ அல்லது சேர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார். பிரிட்டிஷ் அரசு வழங்கி வரும் மிகவும் தொன்மையான சிரேஷ்ட நிலை பட்டமே இதுவாகும். இவ்வாண்டின் புத்தாண்டு கௌரவப் பட்டியல் வரிசையில் இது வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஒரு யுத்தக் குற்றவாளி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஜுனியரோடு சேர்ந்து உலகை ஏமாற்றி, அச்சுறுத்தி தவறான வழிக்கு இட்டுச் சென்றவர். 2003 மார்ச் மாதத்தில் பெரும்பாலும் அபிவிருத்தி கண்டிருந்த அரபு உலகின் எண்ணெய் வளம் மிக்க பழம் பெரும் நாடாகிய ஈராக்கை போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இவர்கள் இருவரும் இணைந்து ஆக்கிரமித்தனர். இதன் மூலம் சுமார் பத்து லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்;கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மிக மோசமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். வளம் மிக்க அந்த நாடு குட்டிச் சுவராக மாற்றப்பட்டு சுடுகாடாக்கப்பட்டது. அதன் உள்கட்டமைப்புக்கள் தரை மட்டமாக்கப்பட்டு சாம்பல் மேடாகவும் தூசு மண்டலமாகவும் மாற்றப்பட்டன.
டொனி பிளாயருக்கு வழங்கப்பட்டுள்ள இன்றைய விருது, ஈராக்கின் கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதன் கோரமான நிழலில் வளர்ந்த மற்றும் வாழுகின்ற மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும். இந்த சேர் பட்டத்தை பிளாயருக்கு வழங்க வேண்டாம் எனக் கேட்டு முன்வைக்கப்பட்ட மகஜரில் ஆறு தினங்களுக்குள் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒப்பமிட்டனர். ஆனால் அந்த மக்களின் உணர்வுகளை பிரிட்டிஷ் அரச பீடம் துச்சமென மதித்துள்ளது. “கொல்லப்பட்ட எண்ணிலடங்காத உயிர்களுக்கு பிளாயர் நேரடியாகவும் தனிப்பட்ட முறையிலும் பொறுப்புக் கூற வேண்டியவர். உண்மையில் அவர் மீது யுத்தக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப் பட வேண்டும்” என மக்கள் அந்த மகஜரில் கேட்டிருந்தனர்.
பிரிட்டிஷ் தொழில் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் றிச்சர்ட் பேர்கன் தனது டுவிட் பதிவில் “எமது ஒழுங்;கு முறையில் எவ்வளவோ பிழைகள் உள்ளன என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது. ஈராக் யுத்தத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான டொனி பிளாயர் சேர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த யுத்தக் குற்றங்களை உலகுக்கு எடுத்துரைத்த ஜுலியன் அஸன்ஜே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார் அவர் அங்கு வாழ்நாள் முழுவதும் சிறைவாசத்தை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் பத்தி எழுத்தாளர் யுவொன் றிட்லி இந்தப் பட்டத்தை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள ராஜ துரோகம் என வர்ணித்துள்ளார்.
இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு எதிராக மக்களால் முன்வைக்கப்பட்ட மகஜருக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் 2004ம் ஆண்டு ஈராக்கின் பஷ்ரா நகரில் இடம்பெற்ற வீதி ஓர குண்டு வெடிப்பில் தனது 19 வயதான மகன் கோர்டனை இழந்த தாய் ரோஸ் ஜென்ட்டிலும் முக்கியமானவர். அவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் “முகத்தில் முட்டாள் தனமான கபடப் புன்னகையுடன் மகாராணியின் முன்னாள் நிற்பதற்குப் பதிலாக எனது மகன் அடக்கப்பட்ட மயானத்திற்கு சென்று அவனது கல்லறைக்கு முன்னாள் நின்று தான் என்ன செய்தேன் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் அரச வம்சம் எப்போதுமே கொலைகாரர்களை சேர் பட்டம் வழங்கியும், வீதிகளுக்கு அவர்களின் பெயர்களைச் சூட்டியும், சிலைகளை நிறுவியும் அழகு பார்த்துள்ளது. டொனி பிளாயர் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல என்று மற்றொரு அரசியல் செயற்பாட்டாளர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
எந்தவிதமான நியாயமான காரணங்களும் இன்றி புஷ்ஷ{ம் பிளாயரும் 2003 மார்ச்சில் அப்பாவி ஈராக் மக்களை இலக்குவைத்து தமது படைப்பிரிவுகளையும் குண்டு வீச்சு விமானங்களையும் ஈராக்கிற்கு அனுப்பி வைத்தனர். படைகள் பிரவேசித்த ஓரிரு தினங்களிலேயே அங்கு மக்களின் அடிப்படைத் தேவைகளான தண்ணீர் விநியோகம், உணவு விநியோகம், மின் விநியோகம், மருந்து விநியோகம் என எல்லாமே துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதி நிலைக்கு கொண்டு வரப்பட்டனர். மக்கள் இருப்பிடங்களையும் இழந்தனர். அமெரிக்க யுத்த விமானங்கள் நிர்க்கதியான அப்பாவி மக்கள் மீது தொடர்ச்சியாக மரணத்தையும் அழிவையும் பொழிந்தன.
மிகவும் திட்டமிட்ட முறையில் அத்தியாவசிய விநியோகங்களைத் துண்டித்ததால் புஷ்ஷ{ம் பிளாயரும் மனித வரலாற்றில் அப்பாவி மக்கள் மீது மிகக் கொடுமையான இன ஒழிப்பில் ஈடுபட்ட குற்றத்துக்கு ஆளாகி உள்ளனர். குண்டு வீச்சுக்கு மேலதிகமாக ஈவு இரக்கமின்றி மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் தமது கைவரிசைகள் அனைத்தையும் வான் வழியாகவும் தரை வழியாகவும் அப்பாவி மக்கள் மீது கட்டவிழத்து விட்டனர். பூமியே அதிரும் வகையிலான நவீன ரக சக்தி மிக்க குண்டு வீச்சுக்கள் மூலம் செழிப்பாக மக்கள் வாழ்ந்த பூமி மனித மாமிசத்தால் நிரம்பி வழியத் தொடங்கியது. தாக்குதலில் சிக்கி உயிர் தப்பி குற்றுயிரும் குறை உயிருமாகக் கிடந்தவர்கள் எழுப்பிய மரண ஓலம் உலகை உலுக்கியது. இதில் உயிர் தப்பிய சிறுவர்கள் தமது உறவுகளைத் தேடி இரத்தம் வழிய வழிய அலைந்த காட்சிகள் மனித வரலாற்றில் அதற்கு முன் பதியப்படாதவை.
ஈராக்கில் இந்த இரத்த ஆறு நீண்ட நாள் ஓடியது. அந்த நாற்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு பயங்கரமானவை. தமது தலைக்கு மேலாக எந்த நேரத்தில் எந்த விமானம் பறக்கும் அதில் இருந்து எத்தகைய குண்டுகள் வந்து விழும் என்ற அச்சம் மக்களை நாளுக்கு நாள் வாட்டி வதைத்தது. தமது அன்புக்கு உரியவர்களும் அயலவர்களும் தமது கண்ணெதிராக துண்டு துண்டாக சிதறுண்டு போவதையும் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட தமது வீடுகளும் ஏனைய கட்டிடங்களும் சுக்குநூறாகிப் போனதையும்; கண்ட கொடிய அனுபவத்தை ஈராக் மக்களில் பலர் பெற்றுக் கொண்டனர்.
திரும்பிய திசைகளில் எல்லாம் அழிவும் நாசமும் மட்டுமே எஞ்சி இருந்தது. இவ்வளவு அனர்த்தங்களையும் சுற்றி இருந்த அரபு உலகமும், ஐரோப்பாவின் மனித உரிமைக் காவலர்களும் அமைதியாக இருந்து வேடிக்கைப் பார்த்தனர். தம்மிடம் சரணடைந்த ஈராக் படைவீரர்களைக் கூட அமெரிக்கப் படையினர் யுத்த தர்மங்கள் அனைத்தையும் மீறி சுட்டுக் கொன்றனர். இந்த அழிவுகளில் கொல்லப்பட்ட ஈராக்கின் அப்பாவி மக்களினதும் படை வீரர்களினதும் எண்ணிக்கை பற்றி இதுவரை எங்கும் சரியான தகவல்கள் எதுவும் கிடையாது.
இந்தப் படுகொலைகளுக்கும் மனித அலவங்களுக்கும் அப்பால் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தின் தேசிய நூதனசாலையில் இருந்து விலைமதிப்பற்ற கலைப் பொக்கிஷங்களும் வரலாற்றுப் பொக்கிஷங்களும் அமெரிக்கப் படைகளால் சூறையாடப்பட்டன. இந்த பொக்கிஷக் கொள்ளை ஈராக்கின் ஏனைய இடங்களிலும் தொடர்ந்தது.
சுமார் 170,000 பொக்கிஷங்கள் கொள்ளையிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. றுயசஙய ஏயளந எனப்படும் (பண்டைய கால பூச்சாடி) கி;.மு 3500ம் வருடத்துக்குரிய விலைமதிப்பற்ற ஒரு அற்புதமான கலைப் பொருள், இன்றைய ஈராக்கை உள்ளடக்கிய பண்டைய மொசப்பத்தேமியாவின் சுமேரியர்களின் நகரங்களில் ஒன்றான உர் நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு காளை மாட்டின் தலை, மொசப்பத்தேமியாவின் முதலாவது பேரசர் என வர்ணிக்கப்படும் அக்காடிய பேரரசரின் குந்தி இருக்கும் நிலையிலான கி.மு 2300க்கு சொந்தமான ஒரு உருவச் சிலை என்பன கொள்ளையிடப்பட்டவற்றில் மிகவும் விலைமதிப்பற்ற புராதனப் பொருள்கள். இந்தக் கொள்ளைகள் தன்னை கண்ணீர் சிந்த வைத்ததாக அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் பொரிஸ் ஜோன்ஸன் எழுதி உள்ள ஒரு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று ‘த ஸ்பெக்டேடர்’ என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த அவர் “ஈராக்கின் தேசிய நூதனசாலையில் இடம்பெற்றுள்ள சில கொள்ளைகள் நியுயோர்க் நகரில் உள்ள சில வங்கியாளர்களின் வங்கிப் பாதுகாப்பு பெட்டகங்களில் தஞ்சம் அடைந்துள்ளமை எனக்கு ஆத்திரத்தை உண்டாக்குகின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது இத்தோடு நின்று விடவில்லை. இறந்தவர்களையும் புதைக்கப்பட்டவர்களையும் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அமெரிக்க பயங்கரவாதம் அங்கே தலைவிரித்தாடத் தொடங்கியது. அநாதரவான ஈராக்கிய பிரஜைகள் பலர் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பருவ வயதினரும் எந்த நியாயமான காரணங்களும் இன்றி கைது செய்யப்பட்டு மிக மோசமான முறையில் சிறைகளிலும் வதை முகாம்களிலும்; அடைக்கப்பட்டு கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டனர்.
மிக மோசமான விசாரணை முறைகளை அந்த மக்கள் மீது அமெரிக்கப் படையினர் பிரயோகித்தனர். கூண்டுகளில் அடைத்து வைத்தல், முழுமையாக நிர்வாணமயமாக்கல், தாங்க முடியாத உஷ்ணத்திலும், தாங்க முடியாத குளிரிலும் வாட்டி எடுத்தல், ஆகக் கூடுதலான ஓசையையும் ஒளியையும் அவர்கள் மீது பிரயோகித்தல், பல நாற்களுக்கு தூங்க விடாமல் தடுத்தல் என பல்வேறு சித்திரவதை முறைகள் சிறைகளிலும் வதை முகாம்களிலும் தாராளமாகப் பிரயோகிக்கப்பட்டன. வலி, வேதனை, வசதியீனம், அவமானம், பாலியல் துஷ்பிரயோகம், பலவந்தமான பாலியல் ரீதியான தரக்குறைவு செயற்பாடுகள், பலவந்தமான தன்னினச் சேர்க்கை, மின்சாரம் பாய்ச்சுதல், தண்ணீரில் மூழ்கடித்து மூச்சுத் திணற வைத்தல் என எல்லா சித்திரவதைகளும் தொடர்ந்தன. இந்த விசாரணை முறைகளின் போது பலர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இன்னும் பலர் காணாமல் போயினர்.
புலிட்ஸர் விருது வென்ற புலனாய்வு பத்திரிகையாளர் சிமொர் ஹேஷ் என்பவர் தக்க புகைப்பட ஆதாரங்களுடன் தொடராகப் பல கட்டுரைகளை வெளியிடும் வரை இந்தக் கொடூரங்கள் அனைத்தும் உலகுக்கு மூடி மறைக்கப்பட்டதாகவே இருந்தன. ஈராக்கின் பக்தாத் நகருக்கு அருகில் உள்ள அபூகிராய்ப் சிறையில் அமெரிக்க இராணுவம் அரங்கேற்றிய கொடுமைகளை முடியுமானவரை அவர் உலக மக்களின் கவனத்துக்கு தகுந்த படங்களின் ஆதாரங்களுடன் கொண்டு வந்தார். “நாம் ஒரு நாட்டை நாசமாக்கி அங்கு அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தினோம். ஆனால் அது எதற்காக என்பது தெரியாமலேயே நாம் அதை செய்தோம்” என்று அமெரிக்க படை வீரர் ஒருவர் பிற்காலத்தில் எழுதிய ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கும் முஸ்லிம் உலகும் இவ்வாறு தான் பலவீனப்படுத்தப்பட்டன. இதன் மூலம் அந்தப் பிராந்தியம் இஸ்ரேலுக்குப் பாதுகாப்பான ஒரு பிராந்தியமாக மாற்றப்பட்டது. ஈராக்கையும் அதன் இராணுவ பலத்தையும் அழிக்க வேண்டும் என்பது ஐரோப்பிய அமெரிக்க மற்றும் யூதர்கள் மத்தியில் 4000 வருடங்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வந்த ஒரு கனவாகும்.
ஆங்கிலோ – அமெரிக்க ஆயுதங்கள், எண்ணெய், வங்கித்துறை ஏனைய கூட்டாண்மை சாம்ராஜ்ஜியங்கள் என எல்லாமே ஈராக்கிய அப்பாவி மக்களின் இரத்தத்தில் செழித்தோங்கின. எகிப்து சவூதி அரேபியா உட்பட ஏனைய அரபு கொடுங்கோலர்கள் இந்தப் பாதகங்களில் பங்காளிகளாக இருந்தமை தான் மிகவும் வேதனைக்குரியது. தமது இனத்தை சேர்ந்த தமது மொழியை பேசுகின்ற இன்னொரு தேசத்தின் மக்கள் கொல்லப்படுவதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த பெருமைக்குரியவர்கள் தான் இந்த மத்திய கிழக்கின் ஆட்சியாளர்கள். அதற்கு காரணம் அமெரிக்காவையும் அதன் பங்காளிகளையும் குஷிப்படுத்தி தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். (முற்றும்)
தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போது அமெரிக்கப் படையினரால் பெண்கள் நடத்தப்பட்ட விதம். 2003 மார்ச் 27ல் ஈராக்கின் நஜப் நகரில் எடுக்கப்பட்ட படம்.
கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒரு மகனின் சடலத்தின் மீது கதறி அழும் தாய்
புஷ்ஷும் பிளாயரும் ஏற்படுத்திய அழிவும் நாசமும் மரணமும்