உக்ரைன் அதிபர் மற்றும் அமெரிக்க துணை அதிபரிடையே விசேட சந்திப்பு!

Date:

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிபர் விளாடிமிர் செலோன்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜெர்மனியின் மியூனிச் நகரில் சந்தித்து பேசியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரமும் படையெடுப்பு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெர்மனிக்கு சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் இந்த இக்கட்டான சமயத்தில் மக்களுடன் இருக்க அதிபருக்கு ஜோ பைடன் நிர்வாகம் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியதாக அமெரிக்காவின் சி.என்.என் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் விதிக்கும் என அமெரிக்க துணை அதிபர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...