இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது இருபது-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 46 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஜே ரிச்சர்ட்சன் 2(20),கே ரிச்சர்ட்சன் 2 (44) விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
140 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 18.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் கிளேன் மெக்ஸ்வெல் 48 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 2(22) விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதற்கமைய அவுஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.