SL Vs India T20 Updates: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா அணி!

Date:

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஷங்க 75 ஓட்டங்களையும், தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் மற்றும் தனுஷ்க குணதிலக 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.184 என்ற வெற்றியில் கற்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஸ்ரேயாஷ் ஐய்யர் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும் ரவீச்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் மற்றும் சஞ்சு சம்சுன் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.அதனடிப்படையில் 2 -0 என்ற ரீதியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...