இலங்கை மனித உரிமை விவகாரம்: மீளாய்வுக்காக எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிப்பு!

Date:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கையை இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்பிக்கவுள்ளார்.

இந்த அறிக்கை மார்ச் 3 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் பிரதியை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்குவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்களுக்குள் இலங்கை பதில் அளிக்க வேண்டும் என்றும், உரிய பதில்கள் கவனமாக தொகுக்கப்பட்டு பெப்ரவரி 19 ஆம் திகதி ஜெனிவாவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாது, 49 ஆவது கூட்டத்தொடரின்போது சர்வதேச சமூகம் இலங்கையின் நிலைப்பாட்டை சிரமமின்றி ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை காணப்படுவதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை மனித உரிமைகள் நிலைமைய மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதால் இம்முறை இந்த விடயம் கடினமானதாக இருக்காது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...