உயர்தர பரீட்சையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Date:

தற்போது நடைபெறும் 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இதுவரையிலும் குறைந்த எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்களே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இதுவரை இரண்டு சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம் முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட வினாத்தாள் விநியோகம் மற்றும் நேரக் கணிப்பீடு என்பன புதிய தொழில்நுட்ப முறையின் கீழ் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அத்துடன், வலய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் மேற்பார்வை நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...