எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு நிதியமைச்சரிடம் வேண்டுகோள்!

Date:

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரையில் அதன் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும்,நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும்,எரிபொருள் மீதான வரியை நீக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கையொன்றை வலுசக்தி அமைச்சர் விடுத்துள்ளார்.

எழுத்துமூலம் இன்று(18)இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...