மின்சார கட்டண நிலுவை செலுத்தாதோருக்கு எச்சரிக்கை!

Date:

மின்சார கட்டணத்தை செலுத்தாத பாவணையாளர்களுக்கு அதற்கான மேலதிக கட்டணத்தை அறவிடுதல் அல்லது அவர்களுக்கான மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று மாத காலத்திற்குள் மின்சாரக் கட்டண நிலுவைகைளை செலுத்த தவறுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்திற்குள் கட்டணங்களை செலுத்த தவறினால் அவ்வாறானோரிடமிருந்து கூடுதல் தொகை அறவீடு செய்யுமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இலங்கையில் மின்சார பயனர்களினால், சுமார் ஐயாயிரம் கோடி ரூபா கட்டண நிலுவை செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபைக்கு 4400 கோடி ரூபாவும், இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்கு 600 கோடி ரூபாவும் கட்டண நிலுவை செலுத்தப்பட உள்ளதாகவும் மாதாந்த மின் கட்டணத்தை 30 நாட்களுக்குள் அறவீடு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...