மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 17 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
.
185 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்திய அணியின் பந்து வீச்சில் ஹெர்ஷல் பட்டேல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வய்ட்வொஷ் முறையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.