இலங்கையில் நைஜீரிய சைபர் குற்றவாளிகள்: அதிகரித்துள்ள இணையக் குற்றங்கள்!

Date:

தற்போது நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) தெரிவித்துள்ளது. அத்துடன், நைஜீரிய சைபர் குற்றவாளிகளை நாடு கடத்தவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தற்போது ஒரு தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி உருவாக்கப்பட்டு வருவதுடன், வெளிநாட்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியர்கள். 12 மாத காலப்பகுதியில், 5,400 முறைப்பட்டு தரவுகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றங்களில் தோராயமாக 75 வீதமானவர்கள் இலங்கையர்களாலும், 25 வீதமானவர்கள் நைஜீரியர்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அச்சுறுத்தி பணம் பறித்தல் தொடர்பாக 670 முறைப்பாடுகள், சமூக ஊடக சுயவிவரங்களை ஹேக்கிங் செய்வது குறித்து 370 முறைப்பாடுகள், பாலியல் துன்புறுத்தல் குறித்து 260 முறைப்பாடுகள், 1,400 அவதூறு வழக்குகள், 20 சைபர் டெரரரிசம் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் 2,280 சைபர் கிரைம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மேலும், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கணினிகள் பற்றாக்குறை உள்ளதுடன், பெரும்பாலான ஊழியர்கள் அலுவலக நோக்கங்களுக்காக தங்கள் தனிப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...