உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கை 127வது இடத்தில் ..!

Date:

ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

அதேநேரம், பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, உலக மகிழ்ச்சி அறிக்கையில் 149 நாடுகளில் இலங்கை 129ஆவது இடத்தில் இருந்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானை மகிழ்ச்சியற்ற நாடாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டுள்ள லெபனான், ஜிம்பாப்வேக்குக் கீழே 146 நாடுகளின் குறியீட்டில் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்திற்குச் சரிந்தது.

பட்டியலில் 121ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கு கீழேயும் இந்தியா 136ஆவது இடத்தில் உள்ளது.

நேபாளம் 84ஆவது இடத்திலும், வங்கதேசம் 94ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 121ஆவது இடத்திலும் உள்ளன. முதல் 20 இடங்களில் ஆசிய நாடுகள் எதுவும் இல்லை.

உலக மகிழ்ச்சி அறிக்கை, அதன் 10ஆவது ஆண்டில், மக்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பற்றிய சொந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும், பொருளாதார மற்றும் சமூகத் தரவுகளின் அடிப்படையிலும் கணக்கிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...