‘டீசல் தட்டுப்பாட்டால் தனியார் பேருந்துகள் 15 சதவீதமானவையே சேவையில் ஈடுபட்டன’- கெமுனு விஜேரத்ன

Date:

டீசல் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்துகளில் 15 சதவீதமானவை நேற்று சேவையில் ஈடுபடவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று நியூஸ் நவ் செய்தி தளத்துக்கு தெரிவித்துள்ளார்.

அதேநேரம், டீசல் கிடைக்கப் பெறாவிடத்து திங்கட்கிழமை முதல் பஸ்சேவை நிறுத்தப்படும் எனவும்
டீசல் நெருக்கடிக்கு முன்னர் நாளாந்தம் சுமார் 950 மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வந்ததாகவும், நேற்றைய தினம் மாத்திரம் பேருந்துகளின் எண்ணிக்கை 750 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘கொவிட்’ காரணமாக நாட்டின் நெருக்கடிகளையடுத்து, கிட்டத்தட்ட 500 மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக சில வழித்தடங்களில் பேருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பொது போக்குவரத்து சேவையை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று புதன்கிழமை 25 வீத தனியார் பேருந்து சேவைகள் மட்டுமே இயங்குவதாகவும் டீசல் வழங்கலுக்கான உத்தரவு கிடைத்தபோதும் பஸ்கள் இன்னும் வரிசையில் நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்றையதினம் நாடு முழுவதும் 3000 பஸ்களே சேiயில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும். இந்நிலைமையி தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் பஸ் சேவை முற்றாக நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக அசாங்கத்துடன் சந்திப்பொன்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பேருந்து நேர அட்டவணைகள் திருத்தப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் ஏ.எச்.பந்துல ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சேவைகளை நிறுத்தப் போவதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...