‘தாள் தட்டுப்பாடுகளால் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை’:கல்வி அமைச்சர்

Date:

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தாள் தட்டுப்பாடு ஏற்படாது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.

ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ‘தாள் தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் வந்தன, இருப்பினும், அது தீர்க்கப்பட்டுள்ளதுடன் க.பொ.சாதாரண தரப்பரீட்சையை மே மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

ஏதேனும் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் கூடுதல் காகித கையிருப்புகளை வாங்க கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.

மாநில பல்கலைக்கழக சேர்க்கை குறித்து பேசிய அமைச்சர், இந்த ஆண்டு மேலும் 10,000 இளங்கலை பட்டதாரிகளை சேர்க்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றார்.

‘இந்த ஆண்டு இறுதிக்குள் உயர்தரப் பரீட்சையை நடத்துவதே எங்களின் நோக்கம். பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...