‘பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது’:பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Date:

பொலிஸ் சேவை வாகனங்களுக்கு போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நெருக்கடியின் போது பொலிஸ், படைகள் மற்றும் தீயணைப்புத் துறைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, ‘அனைத்து சேவை வாகனங்களும் அந்த பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் அல்லது டீசலை நிரப்பிக்கொள்கின்றன.

அந்த நிலையங்களில் சேவை வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை ஒதுக்குவதற்கு காவல்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

எனவே, எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வரிசையில் பொலிஸ் சேவை வாகனத்தை நீங்கள் ஒரு போதும் பார்த்திருக்க மாட்டீர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொலிஸ், தீயணைப்புப் படைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தாமதமாக வருவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்ட போதிலும், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...