அனைத்து அசௌகரியங்களுக்கும் மன்னிப்புக் கோருகிறேன்: நாமல்

Date:

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்றிருந்த சிலர் கடும் அசௌகரியங்களுக்குள்ளான நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமைச்சரின் வருகை காரணமாக வெலிமடையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்றிருந்த சிலர் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாக இணையத்தில் பகிரப்பட்ட காணொளிக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், வெலிமடையில் நான் திட்டமிடப்பட்ட நிகழ்வு எதுவும் இல்லை, இது ஒரு தவறான புரிதல் மற்றும் எனது முகப்புத்தகத்தில் பரவிய வதந்தி’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வருவதாகக் கூறப்படும் தகவலையடுத்து வாகனங்கள் உட்பட வரிசையில் நின்ற பொதுமக்கள் வேறு பாதையில் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சரை கொதித்தெழுந்த மக்கள், நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்தையும் விமர்சித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து அசௌகரியங்களுக்கும் முதலில் தாம் மன்னிப்புக் கோர விரும்புவதாகக் கூறிய அமைச்சர், இது கடினமான காலங்கள், ஆனால் ‘நாங்கள் அவற்றை சமாளிப்போம்’ என்று தான் நம்புவதாகக் கூறினார்.

வெலிமடையில் தமக்கு திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை என்று மேலும் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, இது தவறான வதந்தி என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...