பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு முன்னேறியது அவுஸ்திரேலியா

Date:

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா- மேற்கிந்திய அணிகள் இன்று மோதின.

குறித்த போட்டிகள் மழையால் ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.மேற்கிந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய அவுஸ்திரேலியா அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது.

தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி சதம் அடித்தார். இதனையடுத்து 306 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்றஇலக்குடன் வெஸ்ட் மேற்கிந்திய அணி களமிறங்கியது.

45 ஓவரில் 306 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மேற்கிந்திய அணி களம் இறங்கியது.
12 ஓட்டங்கள் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்த மேற்கிந்திய அணி 44 ஓட்டங்களுக்கு 2ஆவது விக்கெட்டை பறிகொடுத்தது.

தொடக்க வீராங்கனை டியான்ட்ரா டாட்டின் (34), ஹேலி மேத்யூஸ்(34), டெய்லர் (48) ஆகியோர் மட்டுமே இரண்டு இலக்க ஓட்டங்களை எடுத்தனர்.

அதனையடுத்து வந்த வீராங்கனை சொற்ப ஓட்டங்களில் வெளியேற மேற்கிந்திய அணி 37 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் ஆஸ்திரேலியா அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நாளை மற்றோரு அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏப்ரல் 3ஆம் திகதி நடக்கும் இறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணியுடம் பலபரீட்சை நடத்தவுள்ளது.

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...