இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார்.
அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சில கவலைகளை முன்வைத்து கடிதம் எழுதியிருந்தார்.
தமது அமைச்சில் உள்ள சில விடயங்கள் தொடர்பிலேயே இந்த கவலைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நாடு மிகவும் பாரதூரமான விடயங்களை எதிர்நோக்கி வருவதனால் தான் தனது அமைச்சில் உள்ள பிரச்சினைகள் குறித்து மௌனம் காத்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் மீது குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.