இரத்மலானை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது: இன்று முதல் இந்திய விமான சேவை!

Date:

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 55 வருடங்களுக்கு பின்னர் இன்று (27) முதல் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று காலை 08:47க்கு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகைத் தரும் விமான நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் 60 டொலர் பயண வரி, 30 டொலர் மாத்திரமே அறவிடப்படவுள்ளது. இதேவேளை, கடந்த 2 வருடங்கள் இயங்காதிருந்த இந்தியாவிற்கான சர்வதேச விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.

இலங்கை உள்ளிட்ட 40 நாடுகளுக்கு சொந்தமான 60 விமான சேவை நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவிக்கின்றது.

கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவிற்கான சர்வதேச விமான சேவைகள் கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...