இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர்!

Date:

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் மார்ச் 19-23 திகதிகளில் பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தோ-பசிபிக் கூட்டாளிகளுக்கான அமெரிக்க அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை அவர் அடிக்கோடிட்டுக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணைச் செயலாளர் நூலாண்ட் பங்காளதேசம் மற்றும் இலங்கையில் கூட்டாண்மை உரையாடல்களையும், புதுடெல்;லியில் வெளியுறவு அலுவலக ஆலோசனைகளையும் நடத்துவார்.

ஒவ்வொரு நிறுத்தத்திலும், துணைச் செயலாளர் நுலாண்ட் மற்றும் தூதுக்குழுவினர் சிவில் சமூகம் மற்றும் வணிகத் தலைவர்களைச் சந்தித்து, பொருளாதார கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பைப் பின் தொடர்வதில் உறவுகளை ஆழப்படுத்தவும் செய்வார்கள்.

இந்த விஜயங்களின்போது, சிவில் சமூகம் மற்றும் வர்த்தக தலைவர்களையும் சந்தித்து பொருளாதார கூட்டணியை வலுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

தூதுக்குழுவில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் கொள்கை துணைப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி ஆகியோரும் அடங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...