களுத்துறை வடக்கு சமுர்த்தி வங்கிக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினரால் மடிக்கணினி உள்ளிட்ட இன்னும் பல உபகரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த வங்கியின் முகாமையாளர் தில்ருக்ஷி ஆரியவன்ச செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.