‘சமூக ஊடகங்களும் ஊடகப் பாவனையும்’ என்ற தொனிப்பொருளில் ஊடக செயலமர்வும், கருத்தரங்கும் புத்தளம்- மன்னார் வீதியில் உள்ள வில்பத்து கேட் பிரதான மண்டபத்தில் நேற்று (19 ) ஒரு நாள் நிகழ்வாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வை தேசிய சமாதான சபை ஏற்பாடு செய்ததுடன் மிஷஸெரியோர், கப்போட் (MISEREOR/CAFOD) நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தது.
இந்த நிகழ்வுக்கு பிரதான வளவாளர்களாக சமூக ஊடகங்கள் தொடர்பான பயிற்றுவிப்பாளரும் டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நெஷனல் நிறுவனத்தின் பிரமுகருமான ஹரித தஹநாயக்க கலந்துகொண்டு நிகழ்ச்சியை வழி நடத்தினார். திருமதி முஸ்னியா நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
மேலும் இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட சமாதான சபையின் உறுப்பினர்களும் அதேபோன்று மாவட்ட உபகிளைகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சமூக ஊடகங்களின் பாவனை எவ்வாறு உள்ளது? அதன் தாக்கங்களை எவ்வாறு புரிந்துகொள்வது, என்பது தொடர்பில் அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் பயனுள்ள செயலமர்வாக இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் அடுத்தக்கட்டமாக சமூகங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்ப்பதில் சமூக ஊடகங்கள் எவ்வாறு பங்களிப்பு செய்வது என்பது தொடர்பாக ஆக்கப்பூர்வமான செயலமர்வாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்களான புத்தியாகம ரதன தேரர் அருட் சகோதரி. ரத்ன மலர் அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் ஆகியோர் தத்தமது சமயம் தொடர்பான கருத்துக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.