லிட்ரோ மற்றும் லாஃப் போன்ற எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
நாட்டில் நிலவும் போதுமான எரிவாயு இன்மைக் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு குறைந்த அளவிலான எரிவாயுவை மட்டுமே வழங்குவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நாடளாவிய ரீதியில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையினால் பல மாவட்டங்களில் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது.
கடந்த சில நாட்களுக்கு மேலாக பல்வேறு விற்பனை முகவர்களிடம் இருந்து எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுவதை காண முடிந்தது.
இதேவேளை பெட்ரோலியக்கூட்டுத்தாபனத்தின் தாங்கி வாகன உரிமையாளர் சங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளைக்கொண்டு செல்லும் பணிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளன.
நேற்று இரவு முதல் தாம் இந்தப் பணியில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தனியார். தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக தமது வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 60 வீதத்தால் அதிகரிக்குமாறு விடுத்த கோரிக்கை உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் இதனாலேயே இந்தத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெற்றோலியக்கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருளை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் அதிகமானவை தனியாருக்கு சொந்தமானவையே இதனால் இவர்கள் பணிகளில் இருந்து விலகினால் எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லாஃப்ஸ் கேஸ் செயல்பாடுகளை நிறுத்தவில்லை என லாஃப்ஸ் கேஸ் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (16) காலை செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, நாங்கள் எரிபொருள் விநியோக செயல்பாடுகளை நிறுத்திவிட்டோம் என்று மக்கள் கூறுகிறார்கள், ஒரு பெரிய நிறுவனம் எப்படி செயல்பாடுகளை நிறுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வங்கிகள் எல்.சிகளை வழங்குவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இது நிகழும்போது, நாங்கள் மீண்டும் எல்பி எரிவாயு விநியோகத்தில் தொடர்வோம்’ என்று வெகபிட்டிய கூறினார்.
எரிவாயு தட்டுப்பாடு உள்ளூர் பிரச்சனை அல்ல, உலகளாவிய பிரச்சனை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
‘உலக சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் உள்ளூர் தேவைக்கு எப்படியாவது விநியோகம் செய்துவிட்டோம். ஒரு சிறிய தாமதம் மீண்டும் செயன்முறைக்குப் பிறகு , நாங்கள் இயல்பு நிலைக்கு கொண்டுவருவோம் என்று அவர் உறுதிப்படுத்தினார்.